வீட்டிலிருந்து வேலை செய்வது வெறும்  உயர்  மட்ட  தொழிலாளர்களுக்கு மட்டும் பொருந்தும்  என்பதை மாற்றி அதை வேளாண் தொழிலிலும் செய்ய முடியும் என்பதை நடைமுறையில் அமுல்  படுத்தி உள்ளனர் குஜராத் விவசாயிகள். வேளாண் உற்பத்தி சந்தைக்கள்   (ஏபிஎம்சி) பெரும்பாலானவை முடிவிட்டதால் தங்கள் பயிர்களை  வீட்டிலிருந்தே விற்கிறார்கள்.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் கடைகளை முடக்கி உள்ள நிலையில், பெரும்பாலான ஏபிஎம்சி (APMC) க்கள் கடைகளை மூடிவிட்டதால், சந்தை  முடங்கி  விட்டது.   இருப்பினும், விவசாயிகள் அதற்கு மாற்றாக  - ‘சந்தைக்கு வெளியே’ விற்பனை அல்லது அவர்கள் ‘ வீட்டிலிருந்து விற்பது’ என்ற நிலை எடுத்திருக்கிறார்கள்.

குஜராத்தில், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் அதிகளவில் சந்தைக்கு வெளியே விற்பனையை செய்கிறார்கள்."இது இரண்டு விஷயங்களில் எங்களுக்கு உதவுகிறது " என்று ஜூனகத் மாவட்டத்தின் விசாவதர் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் படேல் பிசினஸ்லைனிடம் தெரிவித்தார். “முதலில், எங்களுக்கு  போக்குவரத்து செலவுகள் மிச்சம்  . இரண்டாவதாக, நாங்கள் வழக்கமாக APMCளின் கொடுக்கும்  கமிஷன் மற்றும் பிற தொழிலாளர் கட்டணங்களை செலுத்த தேவையில்லை. ”

சந்தைக்கு வெளியே விற்பனை என்பது ஒரு புதிய விஷயம்  அல்ல. இதுபோன்ற நடைமுறை முன்னர் இருந்ததாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர், கணிசமான அளவு பயிர்கள் அந்த முறையில் விற்பனை நடந்திருக்கிறது. "ஆனால் தற்பொழுது  ஏபிஎம்சிக்கள் அனைத்து முக்கிய சந்தைககளும்   மூடப்பட்டுள்ளன," என்று பாரதிய கிசான் சங்கத்தின் குஜராத் பிரிவின் தலைவர் விட்டல் துததாரா சுட்டிக்காட்டினார். “மேலும், வெளியே வருவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இது போன்ற ஒரு சூழ்நிலையில், விவசாயிகள் வீட்டில் தங்கள் பொருட்களுடன் இருப்பதை தவிர  வேறு வழியில்லை. ஆகையால், அதிக அளவில்  விவசாயிகள் இந்த போக்கை கடை பிடிக்கிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது, இதனால் மார்ச் இறுதிக்குள் தங்கள்  கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். ”

கோதுமை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற பயிர்களுக்கு இது அறுவடை காலம், மேலும் காலநிலை  மாறி மழை  பெய்வதற்க்கும் வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு  விற்கப்பட வேண்டும்.  இது அறுவடை செய்யப்பட்ட பயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே விவசாயிகள்  தங்கள் பயிர்களை சீக்கிரம் விற்பனை செய்வது நல்லது, ”என்றார் துததாரா.

வாங்குபவர் - பொதுவாக ஒரு  வியாபாரி  அல்லது மொத்த விற்பனையாளர் - ஒரு கிராமத்தில் இருக்கும்  ஒரு தரகர் அல்லது ஒரு முகவருடன் தொடர்பு கொண்டு பயிரின் தயார்நிலை குறித்த தகவல்களை பெற்றுக்கொள்வார். விவசாயி தனது பயிர் விற்பனைக்கு  தயாராக இருப்பதைப் பற்றி தரகருக்குத் தெரிவித்தவுடன், வர்த்தகர்  விலை மற்றும் பிற போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து தற்போதய நிலவரம் குறித்து முடிவு செய்வார்.வர்த்தகர்  பணத்தை முகவரிடம்  அளிப்பதன் மூலம் விவசாயி  எந்தவொரு பணத்தையும்  செலவு செய்யாமல் தன் பொருட்களை விற்பனை செய்வார்.

5 ஏக்கர் நிலத்தில்  கோதுமை பயிர் செய்யும் படேல், பண்ணைக்கு  வெளியே  விற்பது தனக்கு லாபகரமான ஒன்றாகும் என்றார். உதாரணமாக, அவர் சமீபத்தில் கோதுமையை தனது பண்ணைக்கு வெளியே குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய்  1,665 க்கு விற்றார். "ஏபிஎம்சியில் நான் விற்றதைவிட  200 ரூபாய்  அதிகம் கிடைத்தது. அதோடு எனது பண்ணையிலிருந்து ஏபிஎம்சிக்கு கொண்டு  செல்லும் போக்குவரத்து செலவும்  செய்யத் தேவையில்லை, தொழிலாளி கூலியும் மிச்சம்.  எனவே இது எனக்கு மேலும் அதிக லாபத்தை அளிக்கிறது , ”என்றார்.

சந்தைக்கு வெளியே செய்யும்  பரிவர்த்தனைகளாக  இருந்தாலும்  தாலுகாவின் ஏபிஎம்சிகளுக்கு கொடுக்க வேண்டிய வரி பொருந்தும்.

இயற்கை பேரழிவுகள் மற்றும் சந்தையின்  ஏற்ற இறக்கங்களுக்கு மிகவும் பாதிப்புக்கு ஆளாக கூடிய விவசாயிகளுக்கு சந்தைக்கு வெளியே விற்பனை செய்யும் திட்டம் ஒரு வழியை வழங்குகிறது. அதுவும் ஏபிஎம்சிக்கள் மூடப்பட்டு விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்திருக்கும் நேரத்தில் தங்கள் பொருட்களுக்கு நல்ல  விலையும்  பார்க்கிறார்கள்.

Translated by P Ravindran